Wednesday, June 28, 2017

இயற்கையின் விதி

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வந்து வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள் 
நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்...

டி.வி.விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது...
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி 
உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும்
அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உணவு முறை , நோய், நலம், மருத்துவம் , சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

உண்மையை உணர்வோம்🙏🏿

SPACE

👌👌👌👍👍👍👌👌👌

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? 

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. 

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. 

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!

சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... 
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!

சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,
அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!

1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!

சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம், 
ஆனால்,
என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது!

கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்; 

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!

ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது. 

கொண்டுசெல்லவும் முடியாது!

என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி, 
அவருக்கு தான் சொந்தம். 

அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!

சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை. 

அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்! 

தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை! 

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!?

நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம். 

சக மனிதர்களையும் நேசிப்போம். 

முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!

👉 படித்தில் பிடித்தது...

👌👌👌👍👍👍👌👌👌

அட்சய திருதி

தங்கநகைக் கடைக்குள் ஒருவர் வருகிறார்..
கடை ஓனர்: "வாங்க சார்..! வாங்க..! என்ன வாங்கலாம்னு பாக்குறீங்க..?"
வந்தவர்: "சார்..உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்..?"
"தாராளமா கேளுங்க சார்..!"
"இந்த அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு வாங்குனா வீட்ல ஐஸ்வர்யம் பெருகும்கிறது உண்மையா சார்..?"
"ஆமா சார்...! சத்தியம்....!! நம்ம பழைய சாஸ்திரங்கள்ள சொல்லியிருக்கு சார்...! முன்னோர்கள் சொன்னதுல்லாம் பொய்யா போவுமா ..?"
"அது உண்மைன்னா அதுக்கு 'reverse'சும் உண்மையாத்தான சார் இருக்கணும்..?"
"என்ன சொல்றீங்க..? புரியலயே..?"
"அதாவது… அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு 'வாங்குனா' ஐஸ்வர்யம் பெருகும்னா, அன்னிக்கு கோல்டு 'வித்தா' ஐஸ்வர்யம் 'குறைஞ்சு' போய்டாது..? அப்ப ஏன் சார் நீங்க இவ்ளோ அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் பண்ணி அட்சயை திருதயை அன்னிக்கு உங்க ஐஸ்வர்யத்த வெளில அனுப்பறீங்க..?

புரட்சித்துறவி ராமானுஜர் ஜெயந்தி

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப்பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளையபெருமாள்.

இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பி. அதேசமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக்கொண்டார்கள். பெரிய நம்பி, இளையபெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்றுவரை அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார்.

ராமானுஜர் பிட்சைக்குப் போகும்போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்றபோது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்டபின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.

இதேபோல், அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது, சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே, சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலைமீது ஸ்ரீராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து, இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலைவிட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடிகொள்ளப்போகிறேன் என்று சொல்லி, அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில் தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக்கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக்கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர்.

பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும் அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப்பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சிதருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பதுபோல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின்முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம்தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டுவிரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்கமுடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும்போது கட்டை விரலால் சுட்டுவிரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள்பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

வைணவத்தில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற இன வேறுபாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர்தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்துவருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகுதான் பெருமாளுக்கு நடைபெறுகிறது...

புத்தனாவது சுலபம்

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: "என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?"
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: "நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?"

புத்தர் சொல்கிறார்: "தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல"

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம்.?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

..... படித்ததில் பிடித்தது...                                                                       -Success Smile.. 😪😢👀⚠‼

படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்?

ஐந்தாம் வகுப்பு
-----------------------------
'அ' பிரிவு  
-----------------
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?"
_______
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;

கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
________
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
_______
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
_______
"பிளைட்  ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
____-__
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
______
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.

-கவிஞர் நா. முத்துக்குமார்
===================================
மனதைத் தொட்ட வாசகங்கள்!

இறைவன்

நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்

நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....

"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....

காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!! 

இது என்ன நியாயம்.....??? " என்றேன்.

கலகலவென சிரித்தான் இறைவன்

"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை 

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன் ....... 🙏🏻🙏🏻
👨👨👨‍⚕படித்ததில் பிடித்தது!!

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பாகிட்டுமணி , அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே. வித்யான்னு வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCA வைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்னதான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கேரியரா? நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3.
பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்.

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்.

 

-- 

வாழ்க வளமுடன்

அர்த்தமுள்ள அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்

*நல்ல கருத்துக்களுக்கு ** மதிப்பிருக்காது *இருந்தாலும் * சொல்லி *வைப்போம் *

ஏமாற்றும் மனைவி, 
போலியான நண்பன், 
சோம்பேறியான வேலைக்காரன் 
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

��ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

��ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

��ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

��நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

��உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

��கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
Aska svn
��காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

��பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

��சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

��சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

��கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

��அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

��யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

��எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

��அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

��சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

��வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

��அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

��எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான். ASKA SVN

��மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

��பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

��கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

��வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

��பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

��வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது. ASKA SVN

��கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள👿. என்றும்👿 மாறா👿 அன்புடன் 👿படிக்கும் 👹போதே👹 பிடித்தது👹

16 வகையான செல்வம்

🌻கல்வி
🌹அறிவு
🌷ஆயுள்
🌺ஆற்றல்
🌼இளமை
🍀துணிவு
☘பெருமை
🌿பொன்
🍁பொருள்
💐புகழ்
🌾நிலம்
🎄நன்மக்கள்
🌲நல்லொழுக்கம்
🌸நோயின்மை
🌅முயற்சி
🌈வெற்றி

தமிழ் பொண்ணுங்க

- சிரிச்சாலும் அழகு

- முறைச்சாலும் அழகு

- அன்பா பேசினாலும் அழகு

- அருவா தூக்கினாலும் அழகு

- நாற்று நடுவினாலும் அழகு

- கோலம் போட்டாலும் அழகு

- கோவிலில் சாமி கும்பிடுவதும் அழகு

- கோழி, சேவல்களை கொஞ்சுவதும் அழகு

- தாவணி அணிந்து நடப்பதும் அழகு

- தூரம் சென்று திரும்பி பார்ப்பதும் அழகு

- சமையல் செய்வதும் அழகு, அதை குழந்தைக்கு ஊட்டிவிடுவது அதைவிட அழகு.

- பாம்பை கையால் பிடிப்பது அழகு 
- கரப்பான்பூச்சிக்கு பயப்படுவதும் அழகு.

- மண்ணை பார்த்து நடப்பதும் அழகு

- விண்ணை தொட செய்யும் விடாமுயற்சியும் அழகு

-வெட்கத்தில் சிவக்கும் கன்னங்களும் அழகு.

- கன்னங்களில் விழும் முடியை கோதுவதும் அழகு

- இரவின் குளிர் போல் கருப்பு நிற தேகமும் அழகு

- வேலை செய்யும்பொழுது வரும் வியர்வை துளியும் அழகு

- பேருந்து படிகளில் பயணிப்பதும் அழகு

- சீண்டும் ஆண்களை அடிப்பதும் அழகு

- மனதுக்கு பிடித்தவனை ரசிப்பதும் அழகு

- காதல் வந்ததும் சிணுங்குவதும் அழகு.

- கல்யாணம் முடிந்ததும் பெற்றோரை பிரிகையில் வரும் கண்ணீர் கூட அழகு

ஒட்டுமொத்தத்தில் எங்க தமிழ் பொன்னுங்க அன்பையும் வீரத்தையும் காட்டுற கெத்தே தனிதான்...

வியர்வை படிந்த தலையணை

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன். ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பக்கத்து வீட்டிற்கு ஏதோ ஒரு சாக்கு சொல்லிச்சென்று அதைக்கேட்டு வாங்கிக் குடித்து தாகசாந்தி அடைந்ததுண்டு. இப்போது என் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை அதில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து பொறாமைப்பட்டு வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை. அலுவலகம் மற்றும்  வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி.

சோஃபாவும் அப்படித்தான். அதிக நேரம் அமர்ந்துவிட்டால் 'ரொம்பவும் சோம்பேறியாய் ஆகிவிட்டோமோ! அளவுக்கதிகமாக உடம்பு சுகத்துக்கு பழகிவிட்டோமோ!' என்பது மாதிரியாய் குற்ற உணர்ச்சி தோன்றும். அதுமட்டுமில்லாமல் அமர்ந்தால் பாதி புட்டம் உள்ளேபோய் என்னமோ அசௌகரியமாக உணர்வேன். உடனே பக்கத்தில் இருக்கும் ப்ளாஸ்டிக் சேரில் வசதியாக அமர்ந்து கொள்வதுண்டு.

பீட்ஸா பர்கர் பாஸ்தா என்றெல்லாம் விதவிதமாய் சாப்பிட்டு ருசிபார்த்துவிட்டு 'என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

3GB RAM, quardcore processor, 32GB in build memory என்று அனைத்துமே போதுமான அளவு இருக்கிறதா, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா, மார்க்கெட்டில் ட்ரெண்டில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் hardly I use Facebook and WhatsApp. அதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன்.

அடுத்ததாக எல்ஈடி டிவி. அம்பது இன்ச் இருக்கிறதா, அத்தனை வண்ணங்களையும் தெளிவாக உள்வாங்கிக் காட்டுகிறதா, 1080p or 4K compatibility இருக்கிறதா, WiFi enabledஆ, inbuild internet இருக்கிறதா, மொபைலையோ ஐபேடையோ mirroring செய்ய முடிகிறதா, 1 TB hard diskஐ கனெக்ட் செய்தால் ஏற்றுக்கொள்கிறதா, Miracast, YouTube, Netflix, Browser எல்லாம் உள்ளடக்கியதா, இதுதான் லேட்டஸ்ட் மாடலா என்றெல்லாம் ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு அரை மனதுடன் வாங்கியாயிற்று. ஆனால் அதை வாங்கி அரை வருடங்கழித்து இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் டிவி பார்த்தால் பெரிய விஷயம்.

ஒரு காலத்தில் வெளியே எங்கு போனாலும் ஓசி வைஃபை கிடைக்காதா எதையாவது டவுன்லோட் செய்துவிடமாட்டோமா என்று தவம் கிடந்திருக்கிறேன். ஆனால் இப்போது வீட்டிலேயே ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு சந்தா செலுத்தியாகிவிட்டது. மாதம் 50GB வரை தரவேற்றம் தரவிறக்கம் செய்யமுடியும். ஆனால் Work from Home தவிர வேறு எதற்கும் பெரிதாக அதைப் பயன்படுத்துவதில்லை. அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

வேலை நிமித்தமாய் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க நேரும்போதெல்லாம் அங்கிருக்கும் பஞ்சுமெத்தையிலிருந்து பாத் டப் பிரமிப்பு அகலாமல் அனுபவிக்கும்போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரமோ பத்து நாளோ தங்கி முடித்து வெளியே கிளம்பும்போதுதான் செயற்கையாய் சிரித்து வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட், உதட்டில் வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு உதவிய பணியாளர்கள் என்று இது எல்லாமே மாயை, சம்பளத்திற்காக அவரவர் நிர்பந்தத்தின் பேரில் நமக்கு காட்டிய அனுசரனை, இது ஒரு பிளாஸ்டிக் வாழ்க்கை என்று உணர முடிகிறது. வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனது வியர்வையை கண்ணீரை ஏந்திக்கொண்டு எனக்காகக் காத்திருக்கும் ஒற்றைத் தலையனையை கண்கள் தேடும். 

இப்படியாக பல சுய பரிசோதனைகளின்  வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. நாம் நமக்கு பண வரவு அதிகமாகத் தொடங்கியவுடன் சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த நெருக்கமான வாழ்வைத்தான்!

அதே யோசனையோடு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே நடந்து கொண்டிருந்தவர்களில் இருவரைக் கூப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லத் தோன்றியது. 

'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சந்தோஷங்கறது காசு பணத்தால மட்டும் வந்துடறது இல்லைங்க!' :)

படித்ததில் பிடித்தது.

Friday, June 23, 2017

கன்னிகாதானம்

"கன்னிகாதானம்" என்றால் என்ன?

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. 

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்! 

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், 
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது. 

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது. 

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். 

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்! 

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...

மகளை பெற்றவர்களுக்கு சமர்ப்பணம்.

வாட் இஸ் யுவர் நேம்..?

நேத்து மதியம் 3 மணிக்கு நண்பர் கிட்ட இருந்து போன்..

" ஹலோ., என்ன பண்ணிட்டு இருக்க..?! "

" இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு வர்றேன்.! "

" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! "

" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! "

" சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? "

" வஞ்சரம் மீன் குழம்பு..! "

" சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! "

" இது மேட்டூர் Dam வஞ்சரம்..! "

" என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!

" ஏன் இருக்காதா..? "

" ம்ஹூம்… அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "

" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "

" இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! "

" அது எப்படி செக் பண்றது..?!! "

" அப்படி கேளு…"

" சரி சொல்லுங்க..! "

" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி…"

" ம்ம்…! "









" அது மூஞ்சிக்கு நேரா கேளு..

 வாட் இஸ் யுவர் நேம்..? "😂😂

Monday, June 19, 2017

தெரிந்து கொள்வோம்!!!

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும்கிடையாது அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது. 
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்.

இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

SOME IRONIES THAT CAN EXIST ONLY IN INDIA

1) Politicians Divide us, Terrorists Unite us
.
2) Every1's in hurry, but no one reaches in time

3) Priyanka Chopra earned more money playing Mary Kom, than the Mary Kom earned in her entire career. 

4) It is dangerous to talk to strangers, but it's perfectly ok to marry one

5) Most people who fight over Gita and Quran, have probably never read any of them

6) We rather spend more on our daughter's wedding than on her education

7)The shoes we wear are sold in air-conditioned showrooms, the vegetables we eat are sold on the footpath.

8) Most of the guys who are ignored by Girls in young life are actually the nicest and better husband material :)

9) We live in a country where seeing a policeman makes us nervous rather than feeling safe

10) In IAS exam, a person writes a brilliant 1500 words essay about how Dowry is a social evil. Impresses everyone and cracks the exam.One year later the same person demands a dowry of 1 crore, because he is an IAS officer.

11) Indians are very shy and still are 121 Crore.

12) Indians are obsessed with screen guards on their smartphones even though most come with scratch proof Gorilla Glass but never bother wearing a helmet while riding their bikes.

13) Indian Society teaches 'Not to Get Raped',  rather  'Don't Rape' !

14) Reserved people get more benefit than deserving people...!

15) The worst movies earn the most

16) It is shallow to ask for dowry but prospective bridegrooms should make six or seven figure salaries, preferably settled in U.S.

17) A porn-star is accepted in society as a  celebrity, but a rape victim is not even accepted as a normal human being.    
                      
Best ever lines:                                    
Try to understand people before trusting them ... Because we are living in such a world, where the artificial lemon flavor is used for "WELCOME DRINK" and real lemon is used in "FINGER BOWL"...!!

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

1. கருப்பு கவுணி அரிசி
      மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
      நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
      சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
       நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி : 
     மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 
6. காலாநமக் அரிசி :
     புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 
7. மூங்கில் அரிசி:
      மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 
8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும். 
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
      பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 
10. தங்கச்சம்பா அரிசி : 
      பல், இதயம் வலுவாகும். 
11. கருங்குறுவை அரிசி : 
       இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 
12. கருடன் சம்பா அரிசி :
      இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :
       தோல் நோய் சரியாகும். 
14. குடை வாழை அரிசி : 
       குடல் சுத்தமாகும். 
15. கிச்சிலி சம்பா அரிசி : 
       இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 
16. நீலம் சம்பா அரிசி : 
      இரத்த சோகை நீங்கும். 
17.சீரகச் சம்பா அரிசி :
     அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 
18. தூய மல்லி அரிசி :
    உள் உறுப்புகள் வலுவாகும். 
19. குழியடிச்சான் அரிசி :
     தாய்ப்பால் ஊறும். 
20.சேலம் சன்னா அரிசி : 
     தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 
21. பிசினி அரிசி : 
     மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 
22. சூரக்குறுவை அரிசி :
     பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 
23. வாலான் சம்பா அரிசி :
     சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 
24. வாடன் சம்பா அரிசி : 
     அமைதியான தூக்கம் வரும்.


Do you know the pride of our traditional rice?

1. Black Cow Rice
      Rice ate kings. Cancer does not come. Insulin is secreted.
2. Groom Samba Rice:
      Nervous and physical strength. Masculinity.
3. Pungar rice:
      Sleeping. Breastfeeding.
4. Wild rice:
       Diabetes, constipation, and cancer.
5. Rooter Rice:
     By the way, constipation will be better.
6. Raw rice:
     Buddha ate. The brain, nervous system, blood and kidneys are good.
7. Bamboo rice:
      Arthritis and knee pain are good.
8. Sixteen rice rice:
The bone is fine.
9. Rupee rice:
      Good for stroke. Calvary is correct.
10. Strawberry Rice:
      Dental, heart is strong.
11. Curry Rice:
       Recovering lost energy. Healing diseases also.
12. Garuda Samba Rice:
      Blood, body and mind are clean.
13. Car rice:
       Skin illness is good.
14. Umbrella Banana Rice:
       The intestine is clean.
15. Kitchly Samba Rice:
       Iron nutrients are high in calcium.
16. Blue Samba Rice:
      Anemia will be eliminated.
17.Champa Samba Rice:
     Beauty. Anti-luminous might.
18. Pure Malli rice:
    The internal elements are strong.
19. Cinnamon rice:
     Breastfeeding.
20.Sellam Sanna Rice:
     Muscle, nervous, bone is strong.
21. Bisini rice:
     Menstruation and hip pain is correct.
22. Curry Rice:
     The pungent body is a bit of shimmering.
23. Walan Samba Rice:
     Sleeping. The beauty of the women is a mask. The hip is strong. Men have sperm energy.
24. Wadan Samba Rice:
     Peaceful sleep will come.

மஞ்சப்பை

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.

செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுளை அலங்கரித்த போது நாம் பதறவில்லை.

அத்தனை சூட்டையும் தாங்கிய  வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை.

பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.

நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷமயாக இல்லை.

இலைதழை தின்ற ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று முழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை.

மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.

ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை.

இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை !

நன்றி யாரோ ஒருவர். 😬

ஒரு வரி... ஒரு நெறி!


 - "பாடத்தை ரொம்பப் படிக்காதே... படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்!

பள்ளிக்காலத்தில் ஒவ்வொரு தேர்வின் போதும் அப்பா எனக்குச் சொல்கிற அறிவுரை இது. நான் மிகவும் சராசரி மாணவன். தேர்வுக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க முயல்வேன். அப்போதெல்லாம் அப்பா இந்த வரியைச் சொல்வார். ''முதல் மதிப்பெண் எல்லாம் வேண்டாம்... ஐம்பது மதிப்பெண் வாங்கு, போதும்'' என்பார். இந்த வாக்கியம் அப்பாவுடையது அல்ல. அவருடைய அப்பாவிடமிருந்து அவர் கடன் வாங்கியது. ''படிச்சவன் என்ன செய்வான்? விசிறிக்குக் கீழே உக்காந்து வெள்ளைத் தாளைக் கறுப்பாக்குவான்... வேறென்ன தெரியும் அவனுக்கு?" என்று தாத்தா சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். இந்த உலகத்தில் பிழைப்பதற்கான, சிந்தித்துச் செயல்படுவதற்கான அறிவைப் பள்ளிக்கூடப் படிப்பு தராது என்ற நம்பிக்கை, தாத்தா காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்திலிருக்கிறது. 

அதேநேரத்தில் தினமும் ஒருமுறையாவது என்னை அழைத்து, ''இன்று என்ன படித்தாய்?'' என்று கேட்பார் அப்பா. அவரைப் பொறுத்தவரைப் படிப்பு என்பது, பாடப்புத்தகத்தைப் படிப்பதல்ல. ''பிற புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதில்தான் வாழ்க்கையின் திறப்பு இருக்கிறது. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கிறபோதுதான் சிந்தனை மேன்மையடையும். சிந்தனை மேன்மையடைகிற போதுதான் படைப்புத்திறன் உருவாகும்'' என்பார். இதை நான் பிற்காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

அப்பா குறைந்த காலமே பள்ளிக்கூடம் போனார். ஆனால், வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அவ்வளவு வாசிப்பார். வீடு, எப்போதும் உரையாடல் களமாக இருக்கும். நாங்களும் அவற்றில் பங்கேற்றுப் பேசுவோம். என் வீடு மட்டுமல்ல... 80-களின் முற்பகுதியில் எல்லா வீடுகளுமே உரையாடல் மையங்களாகத்தான் இருந்தன. சினிமா பற்றி, அரசியல் பற்றி மக்கள் பேசுவார்கள். அதனால் அவை இரண்டுமே நன்றாக இருந்தன. 

இன்று வீடுகளில் உரையாடலே இல்லை. அப்படியே பேசினாலும் பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி விடுகிறோம். ''ஏன் வாயைப் பாத்துக்கிட்டிருக்கே... போய்ப் பாடப்புத்தகத்தைப் படி'' என்கிறோம். வீடுகளில் அனைவரும் ஒன்று சேர்வது, டி.வி பார்க்க மட்டும்தான். டி.வி-யை நிறுத்தினால் ஆளுக்கொரு மொபைல்போனை வைத்துக்கொண்டு தனிமையில் ஆழ்ந்து விடுகிறோம்.  

பள்ளிக்கூடத்தில் என்கூடப் படித்த நண்பன், நன்றாகப் படிப்பான். ப்ளஸ் டூவில் 1200க்கு 1120 மார்க் வாங்கினான். பிற்காலத்தில் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவன் அமெரிக்கா போய்விட்டான். அண்மையில் என்னைச் சந்திக்க வந்தான். ஏவி.எம் வளாகத்தில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நான் இருந்தேன். அடையாளங் களைச் சொல்லி வரச்சொன்னேன். ஏவி.எம் வாசலிலிருந்து உள்ளே வருவதற்குள், வழி கேட்டு எனக்கு ஐந்து முறை போன் செய்துவிட்டான். அவனது படிப்பு, அவனைச் சக மனிதர்களோடு பேசவிடாமல் தடுத்திருக்கிறது. அருகில் நிற்கிற ஒரு வாட்ச்மேனிடமோ, வழியில் தென்படுகிற ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடமோ கேட்டிருந்தால், அழகாக வழிகாட்டி இருப்பார்கள். மனிதர்கள் மீது அச்சத்தையும் தயக்கத்தையும்தான் அவனது படிப்பு அவனுக்கு வழங்கியிருக்கிறது. 

சுயமாகச் சிந்திக்கிற, முடிவெடுக்கிற தலைமுறை இப்போதில்லை. அப்பா சொன்னார் என்பதற்காகப் படிக்கப்போகிறார்கள். அம்மா சொன்னதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பொண்டாட்டி சொன்னதற்காக வீடு வாங்குகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதைப் பார்த்து, கார் வாங்குகிறார்கள். தனக்கு என்ன தேவை என்று சிந்திக்கும் ஆற்றலைக்கூடக் கல்வி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. 

தாத்தா அப்பாவுக்குச் சொல்லி, அப்பா எனக்குச் சொன்னதை நான், இப்போது என் பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். பள்ளி தவிர வேறு எங்கே சென்றாலும் அவர்கள் கையில் ஏதாவது ஒரு கதைப்புத்தகம் இருக்கிறது. என் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடந்தது. பிள்ளைகளிடம் ''என்ன ஆக ஆசைப்படுகிறீர்கள்'' என்று கேட்டார் ஆசிரியை.  ''இன்ஜினீயர் ஆகணும்'', ''டாக்டர் ஆகணும்'' என்று பிள்ளைகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் மகன், ''முடிவெட்டும் கடை வைக்கப்போகிறேன்'' என்றான். எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நானும், என் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

''பிள்ளைக்கு உயர்வான விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள்... இல்லையென்றால் இதுவே விதையாக விழுந்துவிடும்'' என்று எல்லோரும் பதறினார்கள். ''இதுவும் உயர்வான விஷயம்தான். இதுவரை அவன் பார்த்த ஆட்களிலேயே, 'தலையைத் திருப்பு', 'குனி', 'ஆடாதே' என்று அவனை அதட்டுபவராக, அடக்குபவராக இருந்த உயர்வான மனிதர், முடி திருத்துபவர்தான். அதனால், எல்லோரையும் அதட்ட வேண்டுமெனில் நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறானோ... என்னவோ? முதலில் குழந்தை சுயமாகச் சிந்தித்து, தானாக எதையாவது பேசட்டும்...'' என்று சொல்லிவிட்டு வந்தேன். 

பள்ளிப்படிப்பு முக்கியம்தான். ஆனால், அது அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக முடக்குகிறது. தயவுசெய்து குழந்தை களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு முன்னதாக நீங்கள் வாசிக்கப் பழகுங்கள்!

 குழந்தைகள் எல்லா செயல்களையும் உங்களைப் பார்த்தே செய்யப் பழகுகிறார்கள். அவர்கள் படித்த முட்டாள்கள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- இயக்குனர் கரு.பழனியப்பன்.